
ஹேப்பி நியூஸ் சொன்ன திவ்யா ஸ்ரீதர்
திவ்யாவின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததையடுத்து அண்மையில் பிரபல சீரியல் நடிகரான ஆர்னவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சிம்பிளாக நடத்தப்பட்டு சென்னை புரசைவாக்கத்தில் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திவ்யாவுக்கு ஆர்னவுடன் திருமணம் நடந்தது பலருக்கு தெரியாது. திவ்யாவும் அவரது முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை ஜெய்சனாவும் தற்போது ஆர்னவுடன் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ஆர்னவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் திவ்யா பகிர்ந்திருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் முதலில் குழம்பி போயினர். அதன்பின் திவ்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து தெளிவடைந்து பிறகு இரண்டாவது குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!