
சீரியல் வெளிவரும் முன்பே விலகிய நடிகை! என்ன தான் பஞ்சாயத்து?
ஆனால், தற்போது அந்த தொடரிலிருந்து ராதிக ப்ரீத்தி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சின்னத்திரை வட்டாரங்களில் சில செய்திகள் கசிந்துள்ளது. அதன்படி, முதலில் சீரியலின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி தான் என சொல்லி அவரை கமிட் செய்துள்ளனர். ஆனால், சூட்டிங்கின் போது நிவிஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும், இந்த சீரியலுக்கு ஹீரோவை கமிட் செய்யாமலேயே சூட்டிங்கிற்கும் சென்றுள்ளனர். ஹீரோ கிடைக்காததால் தொடங்கிய ஒருவாரத்திலேயே சூட்டிங்கும் நின்றுவிட்டது
சீரியலை விட்டு விலகியதை உறுதிப்படுத்திய ராதிகா ப்ரீத்தியும், "பூஜை போட்டு நான்கு மாதங்கள் ஆகியும் சீரியல் சூட்டிங் தொடங்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் தான் சூட்டிங் போனேன். எனக்கு சினிமா மற்றும் வெப்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, டிவி தொடரை விட்டு விலகிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!