
போலீஸாக களமிறங்கும் செய்தி வாசிப்பாளர் மோகன்ராஜ்
இந்த பணியில் இருப்பவர்கள் காக்கி உடை அணிந்து டிராபிக் போலீஸூடன் இணைந்து பணியாற்றலாம். மேலும், காவல்துறையினருடன் சேர்ந்து சாலை கட்டுப்பாட்டு விதிகள் உட்பட பல விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளலாம். தற்போது 15 நாட்கள் இதற்காக பயிற்சி வகுப்பில் பங்குபெற்றுள்ள மோகன்ராஜ், அண்மையில் தனது கனவு ஒருவகையில் பலிதமானது குறித்து பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர், "இது சம்பளத்திற்காக செய்யும் வேலை இல்லை. சமூக அக்கறைக்காக செய்வது. இந்த வேலைக்கு காலம் நேரம் கட்டாயம் கிடையாது, குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் செய்யலாம். இந்த வேலையில் சேர்ந்திருப்பது பெருமையாக உள்ளது" என்று கூறியுள்ளார். நியூஸ் ரீடர் ஒருவர் திடீர் போலீஸாக மாறி பேட்டிக் கொடுத்திருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!