
வருத்தத்தில் வில்லி நடிகை
அவர் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், "செம்பருத்தி தொடருக்காக எனது பெஸ்டை கொடுத்தேன். ஆனால், சேனல் எனக்கு அதை திருப்பி தரவில்லை. நீங்கள் செம்பருத்தி தொடரின் முதன்மை கதாபாத்திரங்களை கொண்டாடினீர்கள். ஆனால், என்னை ஏன் மதிக்கவில்லை?. என்னை ஏன் அழைக்கவில்லை?. எங்கே எனக்கான விருது?. நீங்கள் என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள். ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டனர், கொண்டாடுகின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது அன்பு வைத்திருக்கும் மக்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
வீஜே மவுனிகா செம்பருத்தி தொடரின் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்து கொடுத்துள்ளார். அப்படியிருக்க ஒரு சீரியலின் வில்லி நடிகைக்கு எப்படி தொலைக்காட்சி முக்கியத்துவம் கொடுக்காமல் போனது என பலரும் மவுனிகாவிற்கு ஆதரவாக கேள்வி கேட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!