
புதிய ப்ராஜெக்ட்டின் அப்டேட் கொடுத்த இர்பான்
இந்நிலையில், இர்பான் தற்போது தனது அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இர்பான் தற்போது "உண்மை சொன்னால் நேசிப்பாயா" என்ற பெயரில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சம்யுதா நடிக்கிறார். இதற்கான போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்துள்ளனர். யூ-டியூபை தளமாக கொண்டு குறும்படம் மற்றும் வலைத்தொடர்களை வெளியிட்டு வரும் குட்டி ஸ்டோரி நிறுவனம் இந்த ப்ராஜெக்டை தயாரிக்கிறது. எனவே, இர்பான் கமிட்டாகியிருப்பது குறும்படமா? வலைத்தொடரா? அல்லது திரைப்படமா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!