
புலி ராகவேந்திரன் பதிவால் கடுப்பான ரசிகர்கள்
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியிலும் தான் சந்தித்த தோல்விகள் குறித்தும் பேசியிருந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் "ஒரு தலை காதலால் உடம்பு போச்சு" என கையில் ட்ரிப்ஸ் ஏறும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அதில் சில பதிவுகளில் காதல் தோல்வியால் புலி ராகவேந்திரன் தற்கொலை முயற்சி என்ற தவறான செய்தியும் பரவியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் புலி ராகவேந்திரன் புது வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், மன அழுத்தத்தால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், நான் தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. அந்த போஸ்ட்டையே நான் நண்பர்களுடன் ஜாலியாக பகிர்ந்து கொண்டது தான். எனவே, தவறான செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை பார்க்கும் சில நெட்டீசன்கள் "என்னது, ப்ரண்ட்ஸூக்காக ஜாலியா போஸ்ட் பண்ணியா? எதுல விளையாடனும் ஜாலியாக இருக்கனும்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?" என கடுப்பாகி திட்டி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!