
விஜய் டிவி ராமர் ஒரு அரசு அதிகாரியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ராமருக்கு கிருஷ்ணவேனி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூர். இதைத்தவிர ராமர் பற்றிய வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்நிலையில், ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, "கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!