
ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நக்ஷத்திரா!
இந்நிலையில், நடிகை நக்ஷத்திரா இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்ட வீடியோவில், "எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். ஸ்ரீநிதி பேசியதற்கு அன்றே நான் விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவள் பேசியது சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு வைரலாகும் என்று நினைக்கவில்லை. அவள் டிப்ரஷனில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். சமீப காலங்களில் அவள் பதிவுகளை பார்த்தாலே அது உங்களுக்கு புரியும்.
ஸ்ரீநிதி பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் மேல் உள்ள அன்பினால் பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி விசாரிக்கிறீர்கள், கால் செய்து பேசுகிறீர்கள். ஆனால், ஸ்ரீநிதி சொல்லியது போல் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி" என்று கூறியுள்ளார். இவ்வாறாக கடந்த சில நாட்களாக இணையத்தை கலக்கி வந்த ஸ்ரீநிதி கிளப்பிய சர்ச்சைக்கு நக்ஷத்திரா முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!