
உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன்
இந்த தேர்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் நடக்கிறது. "தமிழகம் முழுவதும் உள்ள திறமையுள்ள ஆண், பெண் இரு பாலரும் வரவிருக்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர், நடிகையாகவோ, நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் அல்லது துணை நடிகராகவோ இருப்பதற்கான வாய்ப்புக்கு இந்த ஆடிஷன் ஒரு மேடையாக இருக்கும். ஜீ தமிழின் மிகப்பெரிய திறமை வேட்டையின் மூலம் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு ஒரு படி மேலே செல்லுங்கள்" என்கிறது ஜீ தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!