
விக்ரம் இசை வெளியீட்டு விழா டிவியில் 22ம் தேதி ஒளிபரப்பு
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த 15ம் தேதி, நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாய் நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினருடன் பார்த்திபன், பா.ரஞ்சித், சிம்பு, உதயநிதி, ராதிகா, லிஸி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வரும் 22ம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
விக்ரம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தியேட்டர் வெளியீட்டுக்கு பிறகு தமிழில் விஜய் டிவியிலும், மலையாளத்தில் ஏசியா நெட்டிலும், ஹிந்தியில் ஸ்டார் கோல்ட் சேனலிலும், கன்னடத்தில் ஸ்டார் சுவர்ணாவிலும், தெலுங்கில் ஸ்டார் மா சேனலிலும் ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!