பிக்பாஸ் தாமரையின் அம்மாவிற்கு புது வீடு கட்டித் தரும் ஜேம்ஸ் வசந்தன்
Advertisement
Advertisement
பிக்பாஸ் தாமரையின் அம்மாவிற்கு புது வீடு கட்டித் தரும் ஜேம்ஸ் வசந்தன்
மே 14, 2022
அ நிறம் | அளவு
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேற மாட்டேன் என்று கூறி கடைசிவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தாமரைச் செல்வியின் தாய் குடிசை வீட்டில் வசித்து வருவது சமீபத்திய பேட்டி மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வீடு கட்டி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். பலரின் உதவியுடன் இந்த வீட்டை கட்டித்தர உள்ளதாக ஜேம்ஸ் வசந்தன் கூறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!