
ஜீ தமிழ் கோடை கொண்டாட்டத்தில் இந்த வார ஸ்பெஷல் என்ன சொல்ல போகிறாய்
ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக "என்ன சொல்ல போகிறாய்" காதல் திரைப்படமும், சூப்பர் குயின் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவுள்ளது.
பரபரப்பான காட்சிகளும், சுவாரஸ்யங்களும் நிறைந்த ரஜினி தொடரின் சிறப்பு எபிசோட், ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. அதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு அஷ்வின் குமார், தேஜூ அஸ்வினி, புகழ் நடிப்பில் வெளியான காதல் படமான "என்ன சொல்ல போகிறாய்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
மாலை நேரம், பொழுதுபோக்கு கொண்டாட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது. ஆயிஷா, ஸ்ரீது கிருஷ்ணன், தேஜஸ்வினி, பார்வதி, மற்றும் கண்மணி மனோகரன் ஆகியோர் சூப்பர் குயின் பட்டத்தினை வெல்ல போட்டியிடவுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த பிரம்மாண்ட கிராண்ட் பினாலேவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மற்றும் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர். நடிகர் அஷ்வின் குமார் செலிபிரிட்டி நடுவராக பங்கேற்கவுள்ளார்.
அடுத்தடுத்த பொழுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த சூப்பர் சண்டேவை உங்கள் ஜீ தமிழில் மதியம் 2 மணி முதல் இரவு 9:30 மணி வரை காணத்தவறாதீர்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!