
கவர்னர் தமிழிசையிடம் விருது வாங்கிய சுஜிதா
பாண்டியன் ஸ்டோர்ஸிலும் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேசமயம் சுஜிதா தென்னிந்திய மொழிகளில் பல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்ஷினிலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுஜிதா தற்போது, தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தராஜன் அவர்களிடமிருந்து விருதினை பெற்றுள்ளார். “மாண்புமிகு மகளிருக்காக” என்ற விருது நிகழ்ச்சியில் சிறந்த ரோல் மாடல் நடிகை என்ற பிரிவில் சுஜிதாவிற்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து விருதினை பெற்ற சுஜிதாவிற்கு தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!