
பாலா போட்ட கண்டிஷன்? சேது பட வாய்ப்பை இழந்த சீரியல் நடிகை!
இதுகுறித்து ஷில்பா அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், "பாலா சார் ஆடிசனுக்கு தாவணி கட்டிட்டு வர சொன்னார். ஆடிசன் முடிந்தது பத்து நாள் கழித்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள். படம் முடிய ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால், அதுவரை நீங்கள் சீரியலில் நடிக்க கூடாது என்றார். எனக்கு அப்போது சீரியலில் அதிக வாய்ப்புகள் வந்தன. பல தொடர்களில் நடித்தேன். எனவே, சேது படத்தை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால், இப்போதும் அது குறித்து எனக்கு கவலை எதுவும் இல்லை. ஏனெனில் சீரியலில் நான் பல வெரைட்டியான கேரக்டரில் தொடர்ந்து நடித்தேன்" என்று கூறியுள்ளார்.
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், ஷில்பா சீரியல்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இன்றளவும் தமிழ் சின்னத்திரையில் டாப் வில்லி நடிகைகளில் ஷில்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!