
ஆனந்த கண்ணன் மனைவியின் உருக்கமான பதிவு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தனது 48-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது 49 வது பிறந்தநாள் அண்மையில் வந்தது. அன்று அவரது மனைவி ராணி கண்ணன், "எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார். முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதியும் 24-வது திருமண நாளை "நீ விட்டு சென்ற காதலுடன் வாழ்கிறேன்" என பதிவிட்டிருந்தார். ராணி கண்ணனின் பதிவை பார்க்கும் ரசிகர்களும், நண்பர்களும் மிகவும் எமோஷனலாகி ஆனந்த கண்ணனை நினைத்து உருகி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!