
ராஜா ராணி 2 தொடரில் ஆல்யாவுக்கு பதில் புது ஹீரோயின்
முன்னதாக ஆல்யா மானசா எப்போதும் ஒரே சந்தியா தான் அது இந்த ஆல்யா தான் என கூறியிருந்தார். பாரதி கண்ணம்மாவில் வெண்பா ஜெயிலுக்கு சென்றதை போல் காட்டி பரீனா பிரசவத்தை முடித்து மீண்டும் நடிக்க வந்தார். எனவே, அதுபோலவே, ராஜா ராணி 2விலும் சந்தியா கேரக்டருக்கு டுவிட்ஸ்ட் வைப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்தியா கதாபாத்திரத்திற்கு அதுபோல எதுவும் செய்ய முடியாது என்பதால் ஆல்யா மீண்டும் நடிக்க வரும் வரை புது நடிகையை சில காலங்கள் சந்தியா கேரக்டரில் நடிக்க வைக்க சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்காக எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் தான் இப்போது வைரலாகிறது. ஆனால், இந்த புது நடிகை யார் என்பதை சஷ்பென்ஸாக வைத்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!