
வலிமை விமர்சன சர்ச்சை : ரசிகர்களுக்கு சின்னத்திரை நடிகையின் பதில்
அஜித் ரசிகர்களின் இந்த ஆவசேமான போக்கிற்கு தற்போது ஸ்ரீ நிதி பதில் கொடுத்துள்ளார். ஸ்ரீ நிதி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், "நான் காசு கொடுத்துதான் படம் பார்த்தேன். அந்த படம் எப்படி இருக்குன்னு சொல்ற உரிமை எனக்கு கிடையாதா?. நான் விஜய் ரசிகை. அதான் இப்படி எல்லாம் பேசுறதா சொல்றாங்க. ஆனால், உண்மையா நான் சிம்பு ரசிகை. நான் எதார்த்தமா பேசினது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும்னு தெரியாது. என்னதான் இருந்தாலும் ஒரு பெண்ணை பார்த்து இப்படிதான் பேசுவீங்களா. நான் பேசினதுல எந்த தவறும் இல்ல. குறிப்பா நான், அஜித் சார் பத்தி எதுவும் தப்பா சொல்லவும் இல்ல. அதனால், நான் எந்த மன்னிப்பும் கேட்கமாட்டேன்" என கூறியுள்ளார்.
தற்போது அஜித் ரசிகர்களில் சிலரே ஸ்ரீ நிதிக்கு சப்போர்ட் செய்து மற்ற ரசிகர்களின் அநாகரீகமான செயல்களை கண்டித்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!