
வெறித்தனமாய் வொர்க் அவுட் செய்யும் ரம்யா
ஜன 29, 2022
Advertisement
பிரபல தொகுப்பாளினியான ரம்யா சுப்பிரமணியன், ரசிகர்களின் மிகவும் ஃபேவரைட்டான தொகுப்பாளராக வலம் வந்தார். தற்போது சினிமாக்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட அவர், அதற்காக நியூட்ரிஷன் கோர்ஸ் எல்லாம் முடித்து சர்டிபிகேட் எல்லாம் வாங்கியிருக்கிறார். தனது கடினமான உழைப்பால் உடலை அழகாக ட்ரிம் செய்துள்ள அவர் அவ்வப்போது தான் செய்யும் வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மிகவும் வெயிட்டான பார் கம்பியை யாருடைய உதவியும் இல்லாமல் ஜிம்மில் தனியாக இருக்கும் போது தூக்கி வொர்க் அவட் செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரம்யாவுக்கு பிட்னஸில் இவ்வளவு ஆர்வமா? என ரசிகர்கள் மிரண்டு போய் பார்த்து வருகின்றனர்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!