
புத்தம் புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாயா சிங்
சாயா சிங் தற்போது "பூவே உனக்காக" தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் "நம்ம மதுரை சிஸ்டர்ஸ்" தொடரில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதற்கான புரோமோக்கள் சமீபமாக தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அனாதையாக விடப்பட்ட நான்கு சகோதரிகள் "அன்னம் அங்காடி" என்கிற டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நடத்துவது போல் காண்பிக்கப்படுகிறது.
நம்ம மதுரை சிஸ்டர்ஸ் தொடர் வருகிற பிப்ரவரி 21 முதல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!