
குக் வித் கோமாளி சீசன் 3-ல் பாரதி கண்ணம்மா நடிகை!
பாரதி கண்ணம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன் தனிப்பட்ட காரணங்களால் தொடரை விட்டு விலகினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் சோகம் அடைந்தனர். இதற்கிடையில் ரோஷினி சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். ரோஷினி மீண்டும் சின்னத்திரையில் அதுவும் பிரபலமான நிகழ்ச்சியில் ரீ எண்ட்ரி கொடுப்பதால், குக் வித் கோமாளி சீசன் 3ஐ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!