
பிக்பாஸ் ஓடிடியில் காஜல் பசுபதி கலந்து கொள்வாரா?
இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சக போட்டியாளர் இவரை தகாத வார்த்தையில் பேசிவிட அவரிடம் பயங்கரமாக கத்தி சண்டை போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் இவரை கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்த காஜல், "லூசு மாதிரி கோபப்படாம ஒரு ஷோல இருந்து வெளிய வந்தா காமெடி பீஸ்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தைல திட்டுறான், அதுக்கு வாய மூடிட்டு இருக்காம கோபப்பட்டா பஜாரின்னு சொல்றது.. என்னடா உங்க நியாயம்" என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து காஜல் பசுபதியை "அக்கா நீங்க பிக்பாஸ் ஓடிடி போங்க" என்று சொல்ல, அதற்கும் பதிலளித்த காஜல், "கூப்பிடமாட்டாங்களே" என நக்கலாக பதில் அளித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!