
ஜன.,9 அன்று ஜீ தமிழ் டிவியில் தலைவி படம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட தலைவி படத்தை விஜய் இயக்கி இருந்தார். ஜெயலலிதா வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருந்தார். ஆண்களின் ஆளுமையில் உள்ள உலகத்தில் மனதிடம்மிக்க பெண் ஒருவர், கற்பனையிலும் யாரும் நினைத்து பார்க்க இயலாத பல்வேறு தடைகளைக் கடந்து எப்படி வெற்றி பெற்றார் என்பதைக் காட்டும் இக்கதாபாத்திரத்தினை கங்கனா சிறப்பாக நடித்திருந்தார்.
இவர் தவிர எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் சமுத்திரகனியும், கருணாநிதி வேடத்தில் நாசரும், ஜானகி வேடத்தில் மதுபாலாவும் நடித்திருந்தனர்.
தலைவியின் அசாத்தியமான பயணத்தினை வரும் ஜனவரி 9 அன்று மதியம் 3:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!