
ஓடிடியில் ரிலீஸாகும் கனா காணும் காலங்கள் - ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இந்நிலையில் அதன் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் வீஜே சங்கீதா, ப்ரணிகா உட்பட பல புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த புரோமோ 3 நாட்களில் 2.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அந்த புரோமோவின் இறுதியில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கனா காணும் காலங்கள் தொடரை பார்க்க விரும்பும் நேயர்கள் விஜய் டிவியில் பார்க்க முடியாது, ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் தான் பார்க்க முடியும். இதனால் தொலைக்காட்சி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சின்னத்திரை வரலாற்றில் முதல் முறையாக நேரடியாக ஓடிடி செல்லும் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!