
குத் வித் கோமாளி 3 படப்பிடிப்பு ஆரம்பம் : புரோமோ வெளியீடு
கடந்த சீசனில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், ஷிவாங்கி இருவரும் மற்ற கோமாளிகளைக் காட்டிலும் பிரபலமடைந்தனர். அவர்களுக்கு சினிமாவிலும் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள்.
புதிய புரோமோவில் நிகழ்ச்சியின் நடுவர்கள் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோரும் கோமாளிகள் ஷிவாங்கி, மணிமேகலை, சுனிதா, பாலா ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள்.
புதிய சீசனின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதில் பங்குபெறும் கெட்டப்புடன் கோமாளிகளான தங்கதுரை, சுனிதா ஆகியோர் சில புகைப்படங்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சீசன் 3 போட்டியாளர்கள் யார் யார், கோமாளிகள் யார் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!