
நான்கு ஆண்டுகள் கழித்து கல்யாணி ரீ-என்ட்ரி
கல்யாணிக்கு 4 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு நவ்யா என்ற மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின் திரையில் தோன்றாமல் ஒதுங்கி இருந்த கல்யாணி, தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைக்கிறார்கள் என்றும் குண்டை தூக்கிப்போட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோ ஒன்றில் கம்பேக் கொடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் கல்யாணி குழந்தைகள் குழுவின் வழிகாட்டியாக உள்ளார். இவருடன் கலக்கப்போவது யாரு அமுதவாணனும் களமிறங்குகிறார். இதன் காரணமாக கல்யாணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சக சின்னத்திரை பிரபலங்கள் அவரது கம் பேக்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!