
வள்ளி திருமணம் - கலர்ஸ் தமிழில் புதிய தொடர்
இந்த தொடரில் பிரபல சின்னத்திரை நடிகை நக்ஷத்திரா நடிக்கிறார். பார்ப்பதற்கு டஸ்கியா இருக்கும் நக்ஷத்திரா முன்னதாக யாரடி நீ மோகினி தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார். அந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து நக்ஷத்திரா அடுத்த என்ன சீரியல் நடிக்க போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர் கலர்ஸ் டிவியில் வள்ளித் திருமணம் என்ற சீரியலில் கமிட்டாகியுள்ளார். வெண்ணிலா கதாபாத்திரத்தில் சாந்தமான குணம் கொண்ட பெண்ணாக வந்த நக்ஷத்திரா கலர்ஸ் டிவியின் வள்ளி திருமணம் தொடரில் துடுக்கான, கெத்தான பெண்ணாக நடிக்கிறார். இந்த சீரியலின் இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. வள்ளித்திருமணம் தொடர் வருகிற ஜனவரி 3 முதல் இரவு 8 மணிக்கு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!