
ஆண்களை பார்த்தால் ஏக்கம் வரும்! ரச்சிதா ஓப்பன் டாக்
மே 30, 2024
Advertisement
சின்னத்திரையில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. சரவணன் மீனாட்சி தொடர் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய புகழையும் மார்க்கெட்டையும் பெற்று தந்தது. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா, இப்போது வரை எந்தவொரு புராஜெக்டிலும் கமிட்மெண்ட் கொடுக்கவில்லை. ஆனால், போட்டோஷூட்களில் டிரெடிஷ்னல், மாடர்ன் என அனைத்து உடைகளிலும் அழகிய பதுமையாக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ""ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தங்களது உடை மற்றும் தோற்றத்திற்காக அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது"" என்று பேசியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…