நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி
மே 19, 2024
Advertisement
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான வீஜே மகேஸ்வரி கணவருடனான விவாகரத்திற்கு பின் மகனுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். மகேஸ்வரி தற்போது சீரியல், சினிமா என நடிப்பதோடு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். சமீபகாலங்களில் மிகவும் கிளாமரான போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் மகேஸ்வரி குறித்து சிலர் ஆபாசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள மகேஸ்வரி, "என்னை பற்றியோ என் உடல் பாகங்களை குறித்தோ ஒரு நிமிடம் பேசும் ஒருவரை பார்த்து நான் கவலைப்பட்டு கொண்டிருக்க முடியாது. நான் என் மகனை சரியாக வளர்க்க வேண்டும். என் அம்மாவை பார்த்து கொள்ள வேண்டும். ஏகப்பட்ட வேலை இருக்கிறது. இதில் முகம் தெரியாத ஒரு நபர் வெட்டியாக போடும் கமெண்ட் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!