
வில்லி அவதாரம் எடுக்கும் வீஜே தீபிகா: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
அதன்பிறகு சீரியல்களில் தீபிகாவிற்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் அவருக்கிருந்த முகப்பரு பிரச்னை சரியாகி விடவே குறும்படங்கள், போட்டோஷூட் என பிசியாக இருந்தார். இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "சித்திரம் பேசுதடி" சீரியலில் வீஜே தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் கம்பேக் தரவுள்ளார். தீபிகாவின் என்ட்ரியால் கதையில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நெகடிவ் ஷேடில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்த தீபிகா தற்போது வில்லியாகவே என்ட்ரி கொடுப்பதால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த தொடரில் வீஜே தீபிகா நடிக்கும் காட்சிகள் வரும் புதன்கிழமை முதல் ஒளிபரப்பாகிறது. சித்திரம் பேசுதடி தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!