
விக்ரம் வழியில் விஜய் ஆண்டனி
அதை தமிழில் இப்போது ஆரம்பித்து வைத்திருப்பவர் விக்ரம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆனந்த் சங்கர் இயக்த்தில் அவர் நடித்து வரும் படத்திற்கு லாபத்தில் பங்கு என்ற விதத்தில்தான் சம்பளம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியானது. அவரை அடுத்து தற்போது விஜய் ஆண்டனி அதே போல சம்பளம் வாங்க ஒப்புக் கொண்டுள்ளார் என்று சொல்கிறார்கள்.
"அயோத்தி" படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இயக்கும் படத்திற்காகத்தான் விஜய் ஆண்டனி இப்படி செய்துள்ளாராம். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான குட் ஷோ இதற்கான கோரிக்கையை வைத்ததும் விஜய் ஆண்டனி ஓகே சொல்லிவிட்டாராம்.
விக்ரம், விஜய் ஆண்டனி வழியில் அடுத்து யார் இப்படி சம்பளம் வாங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தில் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!