
வனிதா விஜயகுமாரின் புதிய அவதாரம்?
சமீபத்தில் நடைபெற்ற பேஷன் வாக்கில், வனிதா தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் கெத்தாக மாடல் போல் நடை போட்டுள்ளார். பேஷன் டிசைனராகவும் பணியாற்ற ஆரம்பித்துள்ள அவர் தன்னுடைய புது பிசினஸ் குறித்து அந்நிகழ்வில் அறிவித்தார். மேலும், மிக விரைவில் தன்னுடைய புது பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை சேட்டைகளை எல்லாம் விட்டு சமத்து பெண்ணாக வலம் வரும் வனிதாவை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர். அவரது புதிய பிசினஸூக்காக வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!