
குடும்ப புகைப்படங்களை பார்த்து வனிதா உருக்கம்
ஆக 01, 2023
Advertisement
தொழில், சினிமா என கண்ணும் கருத்துமாக இருக்கும் வனிதா விஜயகுமார் தனது மகள்களுக்கு நல்லதொரு தாயாக இருந்து வருகிறார். இப்போதெல்லாம் யாரிடமும் சண்டை போடமால் சர்ச்சைகளுக்குள் சிக்காமல் மிகவும் அமைதியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் மகள்கள் மற்றும் மகனுடன் ஒரே குடும்பமாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வனிதா, "சில நினைவுகள் என்றும் மறையாது. காலம் வேகமாக செல்கிறது, குழந்தைகள் நமக்கு சமமாக வளர்ந்து வருகிறார்கள். எனது மகள்கள் தான் எனக்கு சிறந்த நண்பர்கள். அவர்கள் மனிதர்களுக்குரிய அனைத்து அழகான குணங்களுடன் வளர்கிறார்கள். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என பதிவிட்டுள்ளார். வனிதாவின் இந்த தாய்மை குணத்தை பாராட்டும் ரசிகர்கள், வனிதா அவரது மகனுடனும் சீக்கிரமே சேர வேண்டும் என ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!