
நடிகர்கள் செய்தால் சரி, நடிகைகள் செய்தால் தவறா? - வனிதா
ஆக 16, 2023
Advertisement
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அவர் தற்போது சினிமாவில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது குறித்து சர்ச்சையான கருத்தினை கூறியுள்ளார். அதாவது, "சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. நடிகர்கள் படத்தில் புகைப்பிடித்தால் வரவேற்கிறோம். ஆனால், அதையே நடிகைகள் செய்தால் சர்ச்சையாகி விடுகிறது. நடிகைகள் திரையில் புகைப்பிடிப்பதாலேயே நிஜத்திலும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விஷயம். நான் புகைப்பிடிப்பது போல் நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் தனிப்பட்ட வாழ்விலும் அப்படித்தான் என்று அதை சர்ச்சையாக்குவது தவறு. காலம் மாறுகிறது. பெண்கள் புகைப்பிடித்தாலும் அதை முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும். வரவேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!