தெலுங்கு சீரியலில் என்ட்ரியாகும் வைஷூ சுந்தர்
பிப் 16, 2022
Advertisement
டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷூ சுந்தர். நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்த வைஷூ சுந்தரை சின்னத்திரை இன்முகத்துடன் வரவேற்றது. தமிழ் சின்னத்திரை உலகில் பலராலும் அறியப்படும் வைஷூ சுந்தர், தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளார். வைஷூ சுந்தர் தெலுங்கில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் "குங்கமப்பூ" என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் புரோமோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடர் ஸ்டார் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
முன்னதாக தமிழில் "ரன்" என்ற தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான வைஷூ சுந்தர், தற்போது விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 வில் நடித்து ரசிகர்களிடம் அதிக கவனத்தை பெற்றார். மேலும், சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!