
‛ராஜா ராணி 3 குறித்து வெளியான அப்டேட்
அக் 14, 2024
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி. வெற்றிகரமாக இரண்டு சீசன்களை முடிந்த இந்த தொடரின் முதல் சீசனில் ஆல்யாவும், சஞ்சீவும் நடித்திருந்தனர். தற்போது சஞ்சீவ் - கயல் தொடரிலும், ஆல்யா - இனியா தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து ஆல்யாவும், சஞ்சீவ்வும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் ஆல்யா, சஞ்சீவ் மற்றும் இயக்குநர் பிரவீன் பென்னட் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ராஜா ராணி 3க்கு காத்திருங்கள் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!