
பாண்டியன் ஸ்டோர்ஸ் : லட்சுமி அம்ம இறப்புக்கு சீரியல் குழு செய்த பரிகாரம்
செப் 29, 2021
Advertisement
விஜய் டிவியின் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மாள் கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இந்நிலையில் கதையில் டுவிஸ்டாக இவரது கதாபாத்திரம் இறந்ததாக காட்டப்பட்டது. அதையொட்டிய எமோஷனலான எபிசோடுகளும் டிஆர்பி ரேட்டிங்கில் எகிறியது. என்னதான் நடிப்பாக இருந்தாலும் இறந்தவர் போல் நடிப்பது என்பது எப்போதுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சென்டிமென்ட்டான விஷயமாக கருதப்படுகிறது. எனவே, பிணம் போல் தூக்கி செல்வதற்காக ஷீலாவுக்கு பதிலாக பொம்மை ஒன்றை செய்து பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஷுட்டிங் முடிந்தவுடன் நடிகை ஷீலாவுக்கு திருஷ்டி பரிகாரங்களை சீரியல் குழுவினர் செய்துள்ளனர். ஷீலாவுக்கு திருஷ்டி பரிகாரங்களை செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!