இதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் மகளை அனுப்பினேன் : வனிதா பேட்டி
அக் 05, 2023
Advertisement
சினிமா நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ளார். ஏற்கனவே, ஜோவிகா விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என வனிதா பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் என்ட்ரி கொடுத்திருப்பது குறித்து அதிகமான கேள்விகள் எழுந்தது.
இதுகுறித்து தற்போது பதிலளித்துள்ள வனிதா, "பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. அங்கு அவள் அவளாகத்தான் இருக்க முடியும். இப்படி நடந்து கொள் என்று யாரும் சொல்லித்தர முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. என் மகளிடம் நிறையவே அது இருக்கிறது. அவளைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும், அவளை உங்களுக்கு பிடிக்கும். 100 நாட்களில் அவள் யார் என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் என் மகளை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!