
ஜாக்குலினுக்கு எண்ட் கார்டா? சீரியல் குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
அக் 04, 2021
Advertisement
தொலைக்காட்சி பிரபலமான ஜாக்குலின் விஜய் டிவியில் தேன்மொழி பி.ஏ என்கிற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பின் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்திருந்தனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவும் சீரியலுக்கான ஸ்லாட் கிடைக்காது என்பதால், தொலைக்காட்சி நிறுவனமும் இந்த தொடரை முடித்து விடும் என்றே எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதனால் சீரியல் முடிவை நோக்கி செல்லாமல் நீட்டிக்கப்படுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ஜாக்குலின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!