
ஜாக்குலின் நடிக்கும் சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு? காரணம் என்ன?
செப் 24, 2021
விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கிய ஜாக்குலின் மிகக் குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம் பிடித்தார். "கனா காணும் காலங்கள்", "ஆண்டாள் அழகர்" ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்திருந்த ஜாக்குலின் "தேன்மொழி பி.ஏ" என்ற தொடரில் நாயகியாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே இந்த சீரியலுக்கான சரியான ஸ்லாட் கிடைக்காததால் வெவ்வேறு நேரங்களில் மாற்றி மாற்றி ஒளிபரப்பட்டது. மேலும், கொரோனாவின் போது ஷுட்டிங் நடைபெறாததால் சீரியல் ஒளிபரப்புவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு சமீபத்தில் தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இது போன்ற சில சிக்கல்களின் காரணமாக சீரியலை முடித்துவிடலாம் என தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப கதைக்களம் மாற்றியமைக்கப்பட்டு "தேன்மொழி பி.ஏ"முடிவை நோக்கி நகர்த்தப்பட்டு வருகிறது. இந்த தகவலை ஜாக்குலினே தெரிவித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!