
இயக்குநர் கேம் விளையாடிவிட்டார்: வருத்தத்தில் பிர்லா போஸ்
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிர்லா போஸ், "கயல் சீரியலில் எனது வஜ்ரேவேல் கதாபாத்திரம் என்ட்ரிக்கு பின் சீரியல் சூடுபிடித்தது. அதில் இருந்து என்னை நீக்கியதற்கு காரணம் அப்போது எனக்கு ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்தது. நான் முறைப்படி சீரியல் யூனிட்டில் பெர்மிஷன் வாங்கிக்கொண்டு தான் போனேன். போன இடத்தில் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி ப்ரீயாகவே நடித்து கொடுத்துவிட்டேன்.
ஆனால், அதன்பின் என்னுடைய கதாபாத்திரத்தில் வேறொரு நபர் நடித்து வருவதாக கேள்விபட்டேன். என்னிடம் எதையுமே முறைப்படி தெரிவிக்கவில்லை. உண்மையில் பிரச்னை என்னவென்றால் டைரக்டர் சாப்பிட்ட பிறகு தான் ஆர்டிஸ்ட்டுகள் சாப்பிட வேண்டும் என்று சொன்னார்கள். இதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் என் மீது அந்த டைரக்டருக்கு கோபமா? என்று தெரியவில்லை. டைரக்டர் தான் கேம் ஆடியுள்ளார் " என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…