சூர்யா படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய தங்கதுரை
அக் 28, 2021
Advertisement
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சியில் டைகர் கார்டன் தங்கதுரையாக உள்ளே நுழைந்து இன்றைக்கு பழைய ஜோக் தங்கதுரை என அடையாளம் காணப்படும் அளவுக்கு வளர்ந்துள்ள தங்கதுரை, சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை போட்டியை இவர் கலகலப்பாக தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை கவர்ந்தது.
அந்தவகையில் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் "எதற்கும் துணிந்தவன்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தங்கதுரை. நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வரவழைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடி அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளனர் இயக்குனர் பாண்டிராஜும், படக்குழுவினரும். இந்த நிகழ்வின்போது சூர்யா அங்கு இல்லையே என்பது மட்டும் தான் தங்கத்துரையின் மனக்குறையாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!