முடிவுக்கு வந்த சூப்பர் நிகழ்ச்சி : வின்னர் யார் தெரியுமா?
பிப் 23, 2022
Advertisement
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி "சூப்பர் டாடி". ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. ரன்னர் பட்டத்தை வினோத் மற்றும் மகள் திரிஷிகா வென்றனர். அவர்களுக்கு ரூ. 1.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடத்தை "என்னம்மா" ராமரும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் , நான்காவது இடத்தை மதுரை முத்து மற்றும் மகள் யாழினி, ஐந்தாவது இடத்தை கொட்டாச்சி மற்றும் மகள் மானஸ்வி ஆகியோர் பிடித்துள்ளனர். பல நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நுழைந்து சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தை வென்ற நடிகர் கிங் காங்கிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!