மிஸ்டர் மனைவி சீரியலிலிருந்து விலகிய ஷபானா : அவரே சொன்ன காரணம்
ஏப் 13, 2024
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது மிஸ்டர் மனைவி என்கிற தொடரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கும், ஷபானாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், ஷபானா இந்த தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஷபானா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகுவதாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷபானா, "நான் சீரியலிலிருந்து விலகியது உண்மை தான். ஆனால், இது எனது எதிர்கால வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தானே தவிர வேறொன்றுமில்லை. நான் கர்ப்பமாக இல்லை. உண்மையில் அப்படி நடந்தால் சந்தோஷம் தான். சீக்கிரமே வேறொரு பெரிய ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!