
சிறுவாபுரி முருகனை தரிசித்த சீரியல் நடிகைகள்
ஆக 28, 2024
Advertisement
பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய அவர் மீண்டும் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அண்மையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து சீக்கிரமே சீரியல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!