
சீரியல் நடிகை சிவன்யாவுக்கு நேர்ந்த விபத்து : கழுத்தில் தழும்புடன் கண்ணீர் பேட்டி
ஆக 15, 2023
Advertisement
செவ்வந்தி சீரியலில் நடிகை சிவன்யா நெகட்டிவ் ரோலில் நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். இருதினங்களுக்கு முன் பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்துள்ளார். பிறந்தநாளன்று தனது தம்பியுடன் கோயிலுக்கு பைக்கில் சிவன்யா சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்று வீச அவரது துப்பட்டா பைக் சக்கரத்தில் மாட்டி சுற்றியுள்ளது. இதில், துப்பட்டா சிவன்யாவின் கழுத்தை சுற்றி இறுக்க அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு தழும்பு ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக பைக்கிலிருந்து கீழே விழாததாலும், சிவன்யாவின் தம்பி உடனடியாக வண்டியை நிறுத்தியதாலும் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் நேரமால் பத்திரமாக தப்பித்துவிட்டார். பிறந்தநாளன்று தனக்கு நடந்த இந்த சோக விபத்து குறித்து இன்ஸ்டாகிராமிம் சிவன்யா உருக்கமாக வீடியோ வெளியிட்டு தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!