
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை
பிப் 15, 2024
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலெட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபகாலங்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாகி வரும் இவர், தற்போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று எனவும் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ள கம்பம் மீனா, கையில் பெரிய கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!