
சீரியல் நடிகை தீபாவின் கடந்த கால சோகக்கதை!
அதில், "நான் 14 வயதிருக்கும் போது சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். தப்பான நபரை 16 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அது மிகவும் தவறாக அமைந்தது. அப்போதெல்லாம் ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடுவதற்கு கூட கஷ்டப்பட்டேன். திருமணத்திற்கு பிறகு தான் முதல் கணவரின் சுயரூபம் தெரிந்தது. குழந்தையை பெற்றெடுத்த பின் பிழைக்க வழியில்லாமல் குழந்தையை "அத்திப்பூக்கள்" சீரியலில் நடிக்க வைத்து அந்த காசை வைத்து சாப்பிட்டோம். குழந்தைக்கு 4 வயதாகும் போது தான் நான் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். அதிலும் குழந்தையை ஹாஸ்டலில் விட்டு செல்லும் போதெல்லாம் நான் யாருடனோ ஊர் சுற்றுகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள்" என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!