
கும்பலாக நடனம் போட்ட சீரியல் அழகிகள்
ஏப் 23, 2022
ஜீ தமிழ் சேனல் பல்வேறு ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் ஆப் ஸ்கீரினிலும் தங்களது நட்பை தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் நடித்து வரும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விஜய் சேதுபதியின் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் "டிப்பம் டப்பம்" பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் "நீதானே எந்தன் பொன் வசந்தம்" தொடரில் நடித்த தர்ஷனா அசோகன், நிவாஷினி திவ்யா, ரிஷ்மிதா மற்றும் "புதுப்புது அர்த்தங்கள்" நடிகைகளான பார்வதி, அக்ஷயா கிம்மி, ஸ்வேதா சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!