நாங்க நிஜ காதலர்களா? ரசிகர்கள் சந்தேகத்தை போக்கிய சீரியல் ஜோடி
ஆக 31, 2021
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜோடியாக நடித்து வரும் சரவண விக்ரம் - ஐஸ்வர்யா நிஜத்திலும் காதலர்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது அந்த கேள்விக்கு இருவரும் ஜோடியாக சேர்ந்தே விளக்கமளித்துள்ளனர்.
இப்போதெல்லாம் சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் நிஜ வாழ்விலும் கல்யாணம் செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர் தொடரில் கண்ணன் - ஐஸ்வர்யா ஜோடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரமும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக "நீங்கள் நிஜத்திலும் காதல் ஜோடியாக ஆகிவிட்டீர்களா"? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சரவண விக்ரம், தீபிகா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவ்வில் "நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். இந்த கேள்வியை தான் எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்லி சொல்லி எங்களுக்கே கஷ்டமாக இருக்கிறது"என கூறினர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!