கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கும் சரண்யா துராடி
பிப் 20, 2022
Advertisement
விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் "வைதேகி காத்திருந்தால்". பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார்.
செந்தில் - மோனிஷா நடிக்கும் "நாம் இருவர் நமக்கு இருவர்" போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கண் கலங்கி நின்றவரை விஜய் டிவி கை கொடுத்து தூக்கிவிட்டதாக பலரும் பாராட்டி வருகின்றனர். சரண்யா துராடி நடிக்கும் இந்த கெஸ்ட் ரோல், கேரக்டர் ரோலாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…